• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி உயர்தர சிறப்பு கண் மருத்துவமனை கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் துவக்கம்

September 29, 2023 தண்டோரா குழு

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை கோவை ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) அக்டோபர் 1-ம் தேதி துவக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனையை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் ரிப்பன் வெட்டி துவக்கிவைக்கிறார்.

இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன் கூறியதாவது :-

கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், ஆலத்தூர், திரூர் மற்றும் நெம்மாரா ஆகிய இடங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது. தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவையில் அக்டோபர் 1-ம் தேதி ஆர்.எஸ். புரம், டி.பி. ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) துவக்கவுள்ளது.

கண்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும், கண்களைச் சுற்றிலும் உள்ள சவால்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த உயர்தர சிறப்பு தீர்வுகளை தரும் மருத்துவனை இது.டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில், எப்போதும் மாறாத இந்த சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பங்களுடன் திறம்பட செயல்படும் சர்வதேச தரம் வாய்ந்த தீர்வுகளை தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம்.எனவே, சிறப்பான பரிசோதனை,மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள், சிறப்பான ஆலோசனைகளுடன் கண்களை பாதிக்கும் சவால்களுக்கு சரியான தீர்வுகளை அளிக்கிறோம்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள், அவற்றை பெறும் நோயாளிகள், தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இருதரப்பையும் அறிந்துள்ளோம்.எனவே எங்களது தொடர்புகள் மனிதாபிமான மிக்கதாகவும், அன்பான அணுகுமுறை கொண்டதாகவும் இருக்கும்.கண்களை கவனிப்பதில் நிபுணத்துவம், தொழில் அனுபவமிக்க பணியாளர்கள், அன்பும், கருணையுடனும் கடமையாற்றுவோம், என்ற 3 தாரக மந்திரங்களோடு செயல்படுவோம்.

கண் பிரச்னைக்கு உலகில் உள்ள தீர்வுகளை கேரளாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் முன்று மருத்துவ துறை நிபுணர்களின் நோக்கமாக டிரினிட்டி துவக்கப்பட்டது.இதன் தலைவராக டாக்டர் ஏ.கே. ஸ்ரீதரன், இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மற்றும் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோர் இந்த மருத்துவமனைக்கு வலு சேர்த்துள்ளனர்.

நோயாளிகளை மையப்படுத்தி அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்களது கடமை. நோயாளிகளுக்கான வசதியையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம். விரைவின் கோவை மக்கள் டிரினிட்டி அனுபவத்தை பெறவுள்ளனர். டிரினிட்டி பல்வேறு தேசிய நிறுவனங்களுடனும்,முன்னணி மருத்துவ காப்பீட்டு திட்டங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நகரில் முதியோருக்கான சேவையையும் மேற்கொண்டு வருகிறோம்.

எங்கள் கண்நல மருத்துவமனை சார்பில், கோவையில் 25 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்துக்குள் இருக்கும் முதியோர்களுக்கு, வீடுதேடிச் சென்று கண் சிகிச்சைகள் வழங்க இருக்கின்றோம்.மாதந்தோறும் 14 வயதுக்குட்பட்ட, 500 பள்ளிச் சிறார்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்க இருக்கின்றோம்.கிராமபுற பகுதிகளில் அடிக்கடி கண்பரிசோதனை முகாம்கள் நடத்தவுள்ளோம். விரைவில் கோவையில் கண் வங்கியை திறக்கவுள்ளோம்.

நீரிழிவு நோயாளிகள் ஆறுமாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். டயபடிக் ரெடினோபதி எனும் விழித்திரை ரத்த நாள பாதிப்பு நோய், அறிகுறிகள் வெளித்தெரியாமலேயே முற்றிலும் பார்வை இழப்பு நேரிடும்;இதை ‘ஸ்டீலின் விஷன் ‘என்பார்கள். எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலந்தாழ்த்தாது அதிவிரைவு சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்களில் பிரதானமானதாகும்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய்க் கோளாறு உள்ளவர்கள், ரத்தத்தில் குளுகோஸ் கட்டுப்பாடு இல்லாதவர்களின் விழித்திரை ரத்த நாளங்கள், குளுகோஸ் வண்டலால் சிதைவுறும். ஆக்ஸிஜனும் தடையாகும் என்பதால் முற்றிலும் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகும். மேற்படி ஆபத்து நேராமல் இருக்க, நீரிழிவு நோயாளிகள் பார்வை லேசாக மங்கினாலே கண் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவேண்டும்.

இந்த மருத்துவமனையை இந்திய திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் அக்டோபர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு துவக்கி வைக்கிறார். விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே ஸ்ரீதரன் தலைமை வகிக்கிறார். கோவையில் இயங்கும் மருத்துவமனையில், மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா,கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ் தலைமையில் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை ஆகியோர் இருந்தனர்.

மேலும் படிக்க