January 7, 2017 தண்டோரா குழு
தமிழகம் உள்பட நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையெடுத்து, சனிக்கிழமை (ஜனவரி 7) முதல் தமிழகத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதைபோல், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களுக்கு நிலுவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டண விவரம் வருமாறு :
வாகனம் கற்றுக் கொள்ளும் காலம் – ரூ.150.
இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் – ரூ.500.
இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் – ரூ.200.
இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் காலம் கடந்து புதுப்பித்தல் – ரூ.300.
இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஓராண்டு காலம் கடந்து புதுப்பித்தல் – ரூ.1000.
இரு சக்கர வாகன பதிவு – ரூ.50.
மாற்று ஓட்டுநர் உரிமம் – ரூ.5,000.
கார் மற்றும் ஆட்டோ பதிவு – ரூ.300.
கனரக வாகனம் பதிவு – ரூ.1,500.
ஆட்டோ புதுப்பித்தல் – ரூ.625.
ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனப் பதிவு – ரூ.1,000 .
ஆட்டோ காலம் கடந்து புதுப்பித்தல் – ரூ.3,000.
ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பதிவுக் கட்டணம் – ரூ.10,000 .
தேசிய வாகன ஓட்டுநர் உரிமம் -ரூ.1,000.
தமிழகத்தில் உள்ள 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்தக் கட்டண உயர்வு சனிக்கிழமை (ஜனவரி 7) முதல் அமலுக்கு வருகிறது.