April 23, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட அனைத்து மழைநீர் வடிகால் பாதைகளும் மண்
நிறைந்துள்ளது. இதனால் சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. சில இடங்களில் புழு, பூச்சிகள் உருவாக்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த காலத்தில் கட்டப்பட்ட அனைத்து மழைநீர் வடிகால்களும் வாட்டம் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே தண்ணீர், மண், குப்பைகள் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே டில்ட் என்கிற சாய்வு முறையில் அனைத்து வடிகால்களையும் அதற்கான பணியாளர்களை கொண்டு தூர்வாரி
தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.