May 2, 2017 தண்டோரா குழு
கைரேகை எடுப்பதற்கே கேள்வி எழுப்புகிறீர்களே? அடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம் வைத்துள்ளோம் என ஆதார் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஆதார் அட்டை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வழக்கில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்முகுல் ரோஹத்கி ஆஜரானார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஆதார் அட்டைக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் எந்த தவறும் கிடையாது.சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை அவசியம்அதற்காக மரபணு சோதனை செய்தால் கூட தவறில்லைஎனக் கூறினார்.
மேலும், பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை செய்யப்படுகிறது என்றும் ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது என்றும் அவர் வாதாடினார்.