August 5, 2017
தண்டோரா குழு
டி.டி.வி. தினகரன் கொடுத்த பதவி வேண்டாம் என 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
அதிமுக அணிகள் இணைய கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அதிரடியாக அவரது அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார்.
இதில் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள்புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் பழனி மற்றும் திருப்பரங்குன்றம் ஏ.கே போஸ் ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஏற்க மறுத்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படவே விரும்புவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. .