• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெக்னோவின் புதிய அறிமுகம் கேமன் 19 ப்ரோ 5ஜி

August 13, 2022 தண்டோரா குழு

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் டெக்னோ மொபைல், உலகின் முன்னணி பேஷன் புத்தகமான காஸ்மோபாலிடன் இந்தியாவுடன் இணைந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேமன் 19ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

காஸ்மோபாலிடன் டிஜிட்டல் படங்கள், கேமன் 19 போனில் படம் பிடிக்கப்பட்டு, அதன் சிறப்பம்சங்கள் விளக்கப்பட்டன. தொழில்நுட்பம், அழகிய வடிவமைப்பானது, இதன் உடன் இணைந்த ஆடைஅலங்கார அணிவகுப்பிற்கு அழகு சேர்த்தது.

புதிய கேமன் தொடரில், கேமன் 19 ப்ரோ 5ஜி ஒரு நவீன தொழில்நுட்பம் கொண்ட அறிமுகமாக உள்ளது. முந்தைய அறிமுகத்தில் மொபைல் தொழில்நுட்பத்தில் முதல் முறையாக 64 எம்பி கேமரா ஆர்ஜிபிடபிள்யு சென்சாருடன் அறிமுகமானது. தற்போதைய அறிமுகத்தில் இதில் சேர்க்கப்பட்ட சிறப்பம்சமாக கண்ணாடி படநிலைத்தன்மை கொண்ட துல்லியமான, போட்டோக்களை இரவிலும் எடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஆர்ஜிபிடபிள்யு பிளஸ் (ஜி பிளஸ் பி) சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ப்ரோ 5ஜி வகையில், 200 சதவீதம் ஒளியை உள்வாங்கும் திறன் கொண்டது. இத்தகைய அதிகபட்ச சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த போன், அடிப்படையான விஷயங்களை அழகாக எடுத்துக் காட்டும் 0.98மிமி லென்ஸ் கொண்டது. அழகான மெலிதான வடிவமைப்பிற்காக ஐஎப் வடிவமைப்பு 2022 விருதையும் வென்றுள்ளது. இதன் விலை 21,999 ரூபாயாகும். எகே பிளாக் மற்றும் செடர் கிரீன் வண்ணங்களில் கிடைக்கிறது.

டெக்னோ இன்டியா தலைமை செயல் அதிகாரி அர்ஜித் டாலபத்ரா பேசுகையில்,

“நடுத்தரம் முதல் உயர்தர வகையில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பிரிவில், அதிகபட்ச வளர்ச்சியை எட்டியுள்ளது டெக்னோ தொடர் மொபைல்கள். பல ஆண்டுகளாக ஒரு போன் வாங்க எவ்வளவு சிறப்பம்சங்கள் தேவை என்பதை ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேவையான சமுதாய பகிர்வுகள், புதுமையை உருவாக்குதல் போன்றவைகள் இதன் அம்சங்களாக உள்ளன. புதிய தலைமுறை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு சிறப்பம்சங்களை இதில் பெற முடியும். தொழில்நுட்ப தேவைகளோடு அழகிய வடிவமைப்புகளில் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

காஸ்மோபாலிடன் இன்டியா ஆசிரியர் நந்தினி பல்லா பேசுகையில்,

“எங்களது பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கேமன் 19 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அழகான, இனிமையான நிகழ்வாக இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை மாற்ற, தொழில்நுட்பம், அழகான வடிவமைப்பு பேருதவியாக இருந்தது. இத்தகைய தனித்துவமிக்க இணைப்புடன், காஸ்மோ இன்டியா வாசகர்களுக்கு நாடு முழுவதும் உள்ள வாசகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் தரப்பட்டுள்ளது.

இதன்பிரசாரத்தில் பங்கேற்கும் வாசகர்களுக்கு ரொக்க பரிசும் காத்திருக்கிறது. இதன் விபரங்களை, டெக்னோ, காஸ்மோபாலிடன் சமுக ஊடக படிகளில் காண முடியும்,” என்றார்.

கேமன் 19 தொடரில் கடந்த ஜூலை மாதத்தில் கேமன் 19 நியோ, கேமன் 19 மற்றும் கேமன் 19 புரோ 5ஜி போன்றவைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. தொழில்நுட்ப ஜனநாயகத்தில், புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில் நியாயமான விலையில் மக்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பு.

மேலும் படிக்க