May 9, 2022 தண்டோரா குழு
டிரான்ஸ்சயன் இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டான டெக்னோ மொபைல், வழக்கத்திற்கு மாறான அம்சங்களுடன் கூடிய முதன்மையான ஸ்மார்ட்போனான ஃபேண்டம் எக்ஸை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் முதன்முறையாக வளைவான டிஸ்பிளே உள்ளது மிகக்குறைவான விலையாக ரூ.25,999-ல் இது கிடைக்கும்.
கவனத்தை ஈர்க்கும் 108எம்பி அல்ட்ரா ஹெச்டி மோடு செட்டப் உடன் லேசர் நுட்பமிக்க 50எம்பி,13எம்பி,8எம்பி முன்புற கேமிராவைக் கொண்டுள்ளது ஃபேண்டம் எக்ஸ்.இந்த கேமிராவில் இருக்கும் 1ஃ1.3 இன்ச் மிகப்பெரிய சென்சார் காரணமாக மிகவும் குறைவான ஒளி உள்ள சூழலிலும் படம்பிடிக்க முடியும். செல்ஃபி விரும்பிகள் துல்லியமாகவும் தெளிவாகவும் படம்பிடிக்க அனுமதிக்கும் ஒரு ட்யூவல் 48எம்பி,8எம்பி முன்புற கேமிராவும் இதில் உண்டு.
ஸ்மார்ட்போன் பிரிவில் முன்னிலை வகிக்கும் மேம்பாடுமிக்க சில அம்சங்கள் உள்ளதால் இதன் கேமிராவில் உருவப்படங்களை படம்பிடிக்கும்போது பிக்சல் குறைபாடு ஏற்படாமல்,அவற்றை எவ்வித செயற்கைப்பூச்சுக்கும் உட்படாமல் இயற்கையாக தோற்றமளிக்கச் செய்யும்.13ஜிபி ராம் கொண்டு இயக்கப்படும் இந்த போனில் உள்ள அல்ட்ரா-ஃபாஸ்ட் எல்பிடிடிஆர்4எக்ஸ் 8ஜிபி வழங்கும் கூடுதல் 5 ஜிபி மெமரி பியூஷன் தொழில்நுட்பத்தின் மூலமாக அதிவேகத்தை தரும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஃபேண்டம் எக்ஸ் குறித்த தகவல்களைப் பகிர்ந்த டிரான்ஸ்சயன் இந்தியாவின் தலைமை நிர்வாக அலுவலர் அரிஜீத் தலபாத்ரா,
“இளைய தலைமுறையை இலக்காக கொண்டுள்ள ஒரு பிராண்டாக, ஆச்சர்யமான வடிவமைப்புகள், புதுமையான சிறப்பம்சங்களுடன் கூடிய தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சாதனங்களை வழங்குகிறது டெக்னோ. எங்களது இளம் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதை மனதில் இருத்திக்கொண்டு, இந்திய சந்தையில் ஃபேண்டம் எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் விளைவு இந்த ஸ்மார்ட்போன். ‘எதற்காகவும் செயல்படாமல் போய்விடக்கூடாது’ எனும் எங்களது தாரக மந்திரத்தில் உறுதியாக இருக்கும் வகையில், நல்லதொரு போட்டியை ஏற்படுத்தும் விலையில் பிரீமியம் தொழில்நுட்பத்தை எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது எங்களது நிறுவனம்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து அபாரமான வரவேற்பு கிடைத்த நிலையில், முன்பு எங்களது கவனம் மத்திய தரப் பிரிவு ஸ்மார்ட்போன் தேவையை நிறைவு செய்வதில் இருந்தது. இப்போது, புதிய தயாரிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ள சூழலில், நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்புகளுடன் நமது சமூகத்தில் பிரீமியம் பிரிவுக்கான தேவையை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இரண்டாயிரமாவது ஆண்டையொட்டி பிறந்த இளம் தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட ஃபேண்டம் எக்ஸ், அவர்களுக்கு ஏற்றாற்போல சிறந்த தொழில்நுட்பம், உச்சபட்ச பயனர் அனுபவம், அதிகபட்ச பாதுகாப்புடன் கூடிய அழகியல் ஈர்ப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபேண்டம் எக்ஸை இயக்கும் ஹீலியோ ஜி95 ப்ராசசர், ஸ்மார்ட்போன்களுக்கான ஏஆர்எம் எஸ்ஒசியை விட மேம்பட்ட பதிப்பாகும். இது தவிர, இயக்கத்திறனை மேம்படுத்தவல்ல 33 டபிள்யூ ப்ளாஷ் அடாஃப்டர் மற்றும் 4700எம்எஹெச் திறன் கொண்ட பேட்டரி உடன் ஒரு முதன்மையான வெப்பக் குழாய் குளிர்மைத் தீர்வையும் கொண்டுள்ளது இந்த போன். மேலும், உலகளவில் பிரபலமாக விளங்கும் ஐஎஃப் டிசைன் விருது 2022-ஐயும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இவ்விருது ‘தயாரிப்பு வடிவமைப்பின் ஆஸ்கர்’ என்று புகழப்படுகிறது. இதற்காக, உலகம் முழுவதும் 57 நாடுகளில் இருந்து வந்த சுமார் 11,000 பங்கேற்புகளில் இருந்து மிகச்சிறந்த வடிவமைப்பை 132 உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளது.
2022 மே 04-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த ஃபேண்டம் எக்ஸின் விலை இந்திய மதிப்பில் ரூ.25,999ஃ- ஆகும். ஒருமுறை ஃபேண்டம் எக்ஸ் வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் ரூ.2,999ஃ- மதிப்புள்ள ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கரை பரிசாகப் பெறுவார்கள்; இதோடு, ஒருமுறை ஸ்கீரினை மாற்றும் சலுகையும் உண்டு.