November 2, 2021 தண்டோரா குழு
மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மாநகராட்சி சார்பாக 100 வார்டுகளிலும் களப்பணியில் ஈடுபட 1000 பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்
‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் தேங்குவது, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ள 1000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக உள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்தும் தெளிப்பார்கள். வார்டுக்கு 10 பேர் விதம் இப்பணியில் ஈடுபட உள்ளனர் ‘என்றார்.