June 6, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில் தொடங்கியுள்ளது, அடுத்த 3 நாட்களில்பிற பகுதிகளிலும் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
“கேரளாவில் கடந்த மாதம் 30-ம் தேதி தென்மேற்கு பருவமழைதொடங்கியது.அதே போல் தமிழகத்திலும் தற்போது தென்மேற்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பாபநாசத்தில் 14 செ.மீட்டர்மழையும், திருவாரூர் மாவட்டம்வலங்கைமானில் 8 செ.மீட்டர்மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொடங்க வாய்ப்பு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.