July 28, 2017 தண்டோரா குழு
நியூசிலாந்து நாட்டில் ஆளில்லா ட்ரோன் மூலம் சுட சுட பீட்சா விநியோகிக்கும் முறையை டொமினோஸ் பீட்சா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
தற்போது உள்ள நவீன தொழில்நுட்ப உலகில், வீட்டில் தயாரிக்கும் உணவை விட பாஸ்ட்புட் உணவை தான் பலர் விரும்புகின்றனர். பர்கர், பீட்சா போன்ற உணவுகளை ஆர்டர் செய்தால், அதை வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ கொண்டு வந்து தருவது டெலிவரி செய்வது வழக்கம்.ஆனால், அந்த வேலையை ஆளில்லா டிரோன் மூலம் அனுப்பி வைக்கும் முறையை பிரபல டொமினோஸ் பிட்சா நிறுவனம் தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் வட ஆக்லாந்து நகரிலிருந்து ஜானி நோர்மன் என்பவர் பெரி பெரி சிக்கன் பீட்சா மற்றும் கிரான்பெர்ரி பீட்சா வேண்டுமென்று டொமினோஸ் பீட்சா உணவகத்தில் ஆர்டர் செய்துள்ளார்.அப்போது உணவிற்காக காத்திருந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இந்நிலையில் அவர்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள புல் தரையில், அவர்கள் கேட்ட பீட்சாக்கள் டிரோன் மூலம் வந்திறங்கியுள்ளது. ஆடர் செய்த பீட்சவை, டெலிவரி பாய்ஸ் கொண்டு வந்தால், அவர்கள் வந்து சேர கிட்டதட்ட ஒரு மணிநேரம் ஆகும். ஆனால், டிரோன் மூலம் 5 நிமிடத்தில் வந்து சேர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பிட்சா போன்ற உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதற்காக, நாங்கள் நவீன தொழில்நுட்பமான டிரோன் சேவையில் முதலீடு செய்தோம். டிரோனை பயன்படுத்துவதால் போக்குவரத்தை நெரிசல்களை தவிர்க்க முடியும். சரியான நேரத்தில் உணவை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும்.
டிரோன் சேவை குறித்து பல சோதனைகளை மேற்கொண்டு, அதில் வெற்றி அடைந்த பிறகு தான் இந்த முறையை தேர்ந்தெடுத்தோம். இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவுகிறது” என்று டொமினோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.