May 12, 2017 தண்டோரா குழு
ட்விட்டரில் அதிக ரீட்விட் பெற்று ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாக ‘சிக்கன் நக்கேட்ஸ்’ சாப்பிடும் வாய்ப்பை பெற்றான் அமெரிக்க சிறுவன்.
அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரில் கார்ட்டர் வில்கேர்சொன் என்னும் இளைஞன் வசித்து வருகிறான். அவனுக்கு கோழி உணவு வகையில் ‘சிக்கன் நக்கேட்ஸ்’ என்னும் உணவு மிகவும் பிடிக்கும். ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாக அந்த உணவை சாப்பிட வேண்டும் என்று ஆசை அவனுக்குள் வந்தது. அப்படி சாப்பிட வேன்டும்மென்றால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான்.
அதன் பிறகு, அவன் அமெரிக்க நாட்டின் பிரபல வெண்டிஸ் துரித உணவின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பதிவில் “ஒரு ஆண்டு முழுவதும் இலவச சிக்கன் நக்கேட்ஸ் சாப்பிட வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ட்விட் செய்தான். அவர்களும் அவனுடைய கேள்வி விளையாட்டு தனமானது என்று எண்ணி “18 மில்லியன் ரீட்விட் பெற வேண்டும்” என்று கூறினார்.
அவர்கள் கூறியதை ஒரு சவாலாக எடுத்தான் இளைஞன் கார்ட்டர். உடனே அவர் தனது ட்விட்டரில், “ஒரு நபருக்கு சிக்கன் நக்கேட்ஸ் தேவைப்படுகிறது. தயவாய் எனக்கு உதவுங்கள்” என்று பதிவிட்டான். இணையதளத்தில் கார்ட்டரின் பதிவை பார்த்தவர்கள், சுமார் 2௦ மணி நேரத்தில் ரீட்விட் செய்ததால் அரை மில்லியன் ரீட்விட் கிடைத்தது. கார்ட்டர் செய்த காரியத்தை கண்ட வென்டிஸ் துரித உணவு உரிமையாளர், அவனுக்கு ஓர் ஆண்டு இலவச சிக்கன் நக்கெட்ஸ் கிடைக்க செய்தார்.
முன்னதாக, ஹாலிவுட் பிரபலர் எல்லன் ஆஸ்கார் விருது பெற்றபோது, தனது சக நடிகர்களுடன் எடுத்த செல்பியை தனது ட்விட்டரில் பதிவிட்டார். அந்த புகைப்படம் சுமார் 3.3 மில்லியன் ரீட்விட் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே உலக சாதனை என்று எண்ணியிருந்த சமயத்தில், கார்ட்டர் பெற்ற அரை மில்லியன் ரீட்விட் எல்லனின் சாதனையை முறியடித்துள்ளது.