May 17, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் ஒரு பெண் தன் இளைய சகோதரியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று அறிந்து தானே வாடகை தாயாக இருந்து அவருக்கு குழந்தை பெற்று தந்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தின் ஒமஹா நகரை சேர்ந்தவர் கெய்சர்(33). அவருக்கு இதுவரை ஒன்பது முறை கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையின்மை குறித்து மருத்துவம் செய்தும் பலனில்லை. தனக்கு குழந்தையே இல்லையே என்று வேதனையடைந்தார்.
இதனையடுத்து வாடக தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் யோசனையை மருத்துவர்கள் அவருக்கு தெரிவித்தனர். ஆனால், முன் பின் தெரியாத ஒருவரை எப்படி வாடகை தாயாக தேர்ந்தெடுப்பது என்று தயங்கினர் கெய்சர். அவருடைய உணர்வை புரிந்துக்கொண்ட அவருடைய மூத்த சகோதரி லிசா ஆடேன்(35), தானே வாடகை தாயாக இருக்க முன் வந்தார்.
மருத்துவர்கள் கெய்சரின் கருமுட்டைகளின் இரண்டு முட்டையை லிசாவின் கருப்பையில் வைத்தனர். அதன் மூலம், லிசா கர்ப்பம் அடைந்து, கடந்த ஆறு வாரங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகளுக்கு அஷ்லின் மற்றும் டியர்னே என்று பெயரிடப்பட்டுள்ளது.
“ என் சகோதரியின் குழந்தைகளை சுமக்கும் இன்பம் எனக்கு கிடைத்தது, வாடகை தாய் என்பதால் நான் பெற்ற குழந்தைகளுடன் நெருங்கிய பிணைப்பு ஏற்படும் என்ற பயம் சிலருக்கு ஏற்படும். ஆனால், நான் சுமந்த குழந்தைகள் என் சகோதரியின் குழந்தைகள் என்றே நான் எண்ணுகிறேன்” என்று லிசா கூறியுள்ளார்.
நெப்ராஸ்கா மாநிலத்தின் சட்டத்தின்படி, குழந்தை பிறப்பு சான்றிதழில் . லிசா தான் குழந்தைகளின் தாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் ஆன பிறகு, என் குழந்தைகளை ஏற்றக்கொள் என்று கெய்சரிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு, லிசா தன் பெற்றோருக்குரிய உரிமையை கைவிட்டுவிடுவார்.
“ஒவ்வொரு நாளும் நான் மகிழ்ச்சியடைகிறேன். குழந்தைகள் இருக்கும்போது தான் அன்பு என்றால் என்னவென்று புரியும் என பல பெண்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். தற்போது அவை என்னை முழுமையாக்குகின்றன. என் மூத்த சகோதரிக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்றும் எனக்கு தெரியவில்லை”
என்று கெய்சர் கூறினார்.