November 4, 2017 தண்டோரா குழு
தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரையுடன் கேரட் அளவையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.தற்போது, சில கடைகளில், பி.ஐ.எஸ்., முத்திரையிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. எனினும், அவற்றில், தங்கத்தின் தரம் குறித்த போதுமான அம்சங்கள் இல்லை.இதனால் தங்கத்தின் தரத்தை அறிய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் நகைகளின் தரத்திற்கு ஏற்ப, 14, 18, 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை, 2018 ஜனவரிக்குள் அமலுக்கு வருகிறது.