March 27, 2025
தண்டோரா குழு
இந்தியாவில் தடவியல் நர்சிங் என்பது ஒரு புதிய துறையாகும் சமீபத்தில் இந்தியா நர்சிங் கவுன்சிலால் பட்டதாரி நர்சிங் பாடத்திட்டத்தில் தடவியல் நர்சிங் சேர்க்கப்பட்டுள்ளது தடவியல் நர்சிங் என்பது ஆதாரங்களை சேகரிப்பது மற்றும் சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பது மட்டுமல்லாமல் தவறுக்கு ஆளானவர்கள் மோசடி மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் தடவியல் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
மார்ச் மாதம் 24, 2025 அன்று, காலை 7.30 மணி முதல் மாலை 6.15 மணி வரை, பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி தேசிய மாநாடு:”தடயவியல் நர்சிங்: சமகால நடைமுறைக்கான ஒரு வளர்ந்து வரும் திறன்” என்ற கருப்பொருளில் மாநாடு நடந்தது.
தலைமை விருந்தினர் டாக்டர் ராகேஷ் கொரியா மற்றும் மேடையில் இருந்த மற் பிரமுகர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயதீபா ஆர் வரவேற்புரையாற்றி மாநாட்டை துவக்கிவைத்தர்.துனைமுதல்வர் டாக்டர் ஜெகதீஸ்வர ராஜ் ஜே துணை முதல்வர் பி எஸ் ஜி ஐ எம் எஸ் அண்ட் ஆர்,டாக்டர் ராஜேஷ் கொரியா, பாபா பரித சுதாகர அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ சட்ட நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பதிவாளர், பஞ்சாப் அவர்கள் மற்றும் கௌரவ விருந்தினராக காந்தி நகர் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மனிதநேயத்தின் தலைவர் டாக்டர் ராஜேஷ்பாபு ஆகியார் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் செவிலியர் மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள்,செவிலியர்கள், மற்றும் செவிலியர் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் 800 நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் போஸ்டர் விளக்கக் காட்சி 43 நபர்கள் போஸ்டர் விளக்கக் காட்சியில் பங்கேற்றனர். தடவியல் நர்சிங் மாநாட்டில் 17 போஸ்டர்கள் பதிவேடு செய்யப்பட்டது.இதன் முக்கியத்துவம் தடவியல் நர்சிங்ன் நோக்கம் சார்ந்த சவால்கள் மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து அறிவை வழங்குதல் ஆகும்.
தடவியல் அறிவியல் தன்மையும் மற்றும் மருத்துவ சூழ்நிலையுடன் கூடிய தடவியல் நர்சிங் கருத்தை விரிவாக டாக்டர் ராஜேஷ் பாபு எடுத்துரைத்தார்.மற்றும் தடவியில் நரசிங்கில் 21 ஆம் நூற்றாண்டின் சமூக மாற்றும் சுகாதார பராமரிப்பின் நோக்கம் மற்றும் சவால்களை டாக்டர் ராஜேஷ் கொரியா எடுத்துரைத்தார், தடவியல் குழு உறுப்பினர்களும், வெளிநாட்டு செவிலியர்களின் பங்குகளை பற்றி டாக்டர் ஜெகதீஸ்வரராஜ் விளக்கம் அளித்தார்.
டாக்டர் கிருபா ஏஞ்சலின் தலைமை செவிலியர்,பேராசிரியர்,கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,பாண்டிச்சேரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினர் மற்றும் குற்றவாளி ஆகியோருக்கான விரிவான தடவியல் நர்சிங் பராமரிப்பைபற்றி விவாதித்தார்.
பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயதீபா ஆர் “தடவியல் செவிலியர் சட்ட மற்றும் நெறிமுறைகளின் சிக்கல்கள், தடயம் கையாலூதல்
முறைகளை எடுத்துஉரைத்தார். டாக்டர் சி மனோகரன் போலீஸ் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் தலைமை தடவியல் மருத்துவத்துறை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி அவர்கள் சான்றிதழ்களை கண்டறிதல் சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் பற்றி எடுத்துரைத்தார்.
டாக்டர் ஜி பாலமுருகன் துணை பேராசிரியர் செவிலியர் கல்லூரி தேசிய உச்ச ஒருங்கிணைப்பு மையம்,பெங்களூர் நவீன தடவியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மனநல செவிலியரின் முக்கிய பங்குகளின் உரைய நிகழ்த்தினார்.
ராமன் அரசு வழக்கறிஞர் தலைமை நீதிமன்ற நீதித்துறை நடுவர் கோயம்புத்தூர் இவர் தடவியல் நர்சிங் தொடர்பான இந்திய நீதி அமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி உரை அளித்தார்.இறுதியாக டிஎன்எம்.சி பார்வையாளர் அவர்கள் நிறைவு உரையில் மாநாட்டை பற்றி சிறந்த கருத்துக்களை வழங்கினார்.குளோரி எச் மாநாட்டின் அமைப்பு செயலாளர் மாநாட்டின் அறிக்கையை வாசித்தார். சோனியா இணை செயலாளர் பாராட்டு வாக்குகளுடன் மற்றும் நன்றியுடன் நிறைவு விழா முடிவடைந்தது.