November 13, 2024 தண்டோரா குழு
தடாகம் பகுதியில் வன்கொடுமை தடுப்புச் சட்ட குற்றவாளிகளான 7 நபர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 1 நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.
கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 2017 ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் கமலக்கண்ணன் (40),ரமேஷ் (36 ), அண்ணாதுரை (43),கார்த்திக் (27), பொன்னுச்சாமி என்ற குஞ்சன் (43), அய்யம்மாள் (36),பண்ணாரி (51),மற்றும் சரஸ்வதி என்ற சரசால் (44) ஆகியோர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை கோவை வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கின் விசாரணை இன்று (12.11.2024) முடிவு பெற்று எதிரிகளான கமலக்கண்ணன் (40), ரமேஷ் (36),கார்த்திக் (27), பொன்னுச்சாமி என்ற குஞ்சன் (43), அய்யம்மாள் (36),பண்ணாரி (51), மற்றும் சரஸ்வதி என்ற சரசால்(44), ஆகியோர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அண்ணாதுரை (43) என்பவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் தமிழரசன் (PC 1158) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் பாராட்டினார்.