August 15, 2017
தண்டோரா குழு
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில்,அரசு உதவி பெறும் கர்ணகி அம்மன் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஊழியர்கள் மட்டும் தான் பள்ளியில் கொடியேற்ற வேண்டும். அமைப்புகள் தலைவர்கள் கொடியேற்றக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டிருந்தார்.
இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தடையை மீறி அப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றினார்.இதனால் பள்ளி நிர்வாகிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மோகன் பகவத் கூறும்போது,
பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று தான் தேசிய கொடியேற்றியாதாகவும், இது குறித்து நிர்வாகம் தரப்பில் விளக்கமளிப்பதே சிறப்பானதாக இருக்கும் என்றார்.
தடையை மீறி மோகன் பகவத் கொடி ஏற்றிய இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Attachments area