• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனிக்ஷ் ஜூவல்லரியில் பிரமாண்டமான காதணி திருவிழா கண்காட்சி துவக்கம்

June 21, 2024 தண்டோரா குழு

அனைத்து தலைமுறை பெண்களின் மனதை,மயக்கும் வகையில் தங்கநகை தயாரிப்பில் தனியிடம் பிடித்துள்ள தனிக்ஷ் ஜூவல்லரி நிறுவனம்,கோவை,மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மூன்று கிளைகளில் பிரமாண்டமான காதணி திருவிழா கண்காட்சியை இன்று துவங்கியது.

மங்கையர்களின் மனதை களவாடும் ஆபரணங்களில் முக்கிய ஒன்றாக கம்மல் உள்ளது. பல்வேறு வகையான காதணிகள் சந்தைக்கு வந்தாலும், நேர்த்தியான வடிவங்களில் உருவாக்கப்படும் தங்கத்திலான கம்மல்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். அவ்வாறான தங்கநகைகளில் வடிவமைக்க பட்ட புதிய புதிய டிசைன் கம்மல்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் நிகழ்வை இன்று தனிக்ஷ் ஜுவல்லரி துவங்கியுள்ளது.

கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள தனிக்ஷ் ஜுவல்லரியில் நடைபெற்ற இக்கண்காட்சியை தனிக்ஷ் ஜுவல்லரியின் வட்டார வணிக மேலாளர் வினீத் இன்று துவங்கி வைத்தார்

மேலும் இக்கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

டாடா குழுமத்தை சேர்ந்த தனிக்ஷ் நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான நகை விற்பனை நிறுவனமாக திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் 10 நாட்களுக்கு “பெஸ்டிவல் ஆப் இயர் ரிங்ஸ்” எனும் கண்காட்சியை துவங்கி உள்ளதாகவும், இக்கண்காட்சியில் பல்வேறு வடிவங்களில் காதணிகள் காட்சிப்படுத்த பட்டுள்ளதுடன், தனிக்ஷ் நிறுவனத்தின் ப்ரத்யேக வடிவங்களில் உருவாக்க பட்ட காதணிகளும் இடம் பிடித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் கம்மல்களுக்கு செய்கூலி மற்றும் 20 சதவீகித தள்ளுபடியையும் அறிவித்துள்ளது என்றார். வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் முறையில் இன்றைய தங்கத்தை பெற்று செல்லும் வசதி வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்திய திருநாட்டில் எந்த நகை கடையில் நகையை வாங்கி இருந்தாலும் அதனை அதன் மதிப்பீட்டில் பெற்று அவைகளுக்கு நகைகளாகவும், பணமாகவும் வழங்கும் திட்டமும் உள்ளது என்றார். இந்த கம்மல் திருவிழாவில் மெல்லிய, நுட்பங்களுடன் கூடிய கம்மல்கள், விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட காதணிகள், கைவினை திறன் கொண்ட காதணிகள், என வகை வகையான வடிவமைப்புகள் மங்கையர்களின் மனதை மயக்கும் வகையில் கம்மல்கள் காட்சியளிக்கின்றது.

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஒரு முறை நிச்சியம் வந்து கான வேண்டும் என்றார்.தற்போது அறிமுகம் செய்யபட்ட இக்கன்காட்சி கோவை ஒப்பணகாரவீதி, மேட்டுப்பாளையம் சாலை,மற்றும் பொள்ளாச்சி கிளைகளில் என மூன்று கிளைகளில் இன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது என்றார்.

மேலும் படிக்க