• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் செல் பூச்சிகள்- நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மனு

September 12, 2022 தண்டோரா குழு

தனியார் அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் செல் பூச்சிகள் கடித்து, குழந்தைகளும், பெரியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் குன்னத்தூரான் பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான எஸ் எஸ் மாடன் ரைஸ் மில் அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் செல் பூச்சிகள் அப்பகுதி முழுவதும் பரவி இருப்பதாகவும், செல் பூச்சிகள் கடித்ததில் அப்பகுதியில் உள்ள மக்களின் உடல்களில் தடிப்புகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதற்காக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மீண்டும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

மேலும் கைக்குழந்தைகளின் தலை மற்றும் உடல்களில் செல் பூச்சிகள் கடித்ததில் 10 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாக சுகாதாரத்துடன் செயல்பட்டு வந்த தனியார் அரிசி ஆலை நிர்வாகம் தற்பொழுது முறையாக பராமரிக்கப்படாததால் அரிசி ஆலையில் இருந்து பெரும் அளவில் செல் பூச்சிகள் வெளியேறி வருவதாக செல் பூச்சிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க