• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள தங்கள் நிலங்களை மீட்டு தர ஆதிவாசிகள் கோரிக்கை

February 22, 2017 அனீஸ்

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மற்றும் பழங்குடியினரின் நிலங்களைத் தனியார் அபகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கட்டங்களில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், இருளர், தோடர், பனியர், காட்டு நாயக்கர், குறும்பர் என ஆறு இனங்களைச் சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கால காலமாக வசித்து வருகின்றனர்.

இவர்கள், காடு மற்றும் காடுகளில் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். காட்டில் கிடைக்கும் தேன், மூங்கில், கோரைப்புல் உள்ளிட்ட பல வகையான பொருட்களை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இவர்களுக்கு ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006ன் படி பிரச்சினைக்குரிய நிலமாக இருந்தாலும் ஆதிவாசி மக்களுக்குப் பட்டா நிலம் உரிமை வழங்க உரிமை உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களகாவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தங்களுடைய நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கூடலூர் ஓவேலி அருகேயுள்ள எல்லமலை ஆதிவாசி கிராம மக்கள் தங்களுடைய 88 ஏக்கர் நிலத்தை அண்டை மாநிலமான கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவர்களிடம் இதைப் பற்றி கேட்கும் போது கத்தி மற்றும் அரிவாள், கட்டைகளைக் காட்டி மிரட்டி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராம மக்களான கேத்தி என்பவர் கூறியாதவது:

“கடந்த பல ஆண்டுகளாக எங்களின் கைவசத்தில் இருந்து வரும் சுமார் 88 ஏக்கர் நிலத்தை எல்லமலையில் வசிக்கும் சிலர் போலியான பத்திரங்களைத் தயார் செய்து, பாகம் பாகமாகப் பிரித்து கேரளத்தைச் சேர்ந்த நபர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள். படிப்பு அறிவு இல்லாத நாங்கள் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறோம்” என்று கூறினார்.

ஆதி நில அமைப்பை சேர்ந்த கு.வீரப்பன் கூறுகையில்,

“இந்தப் பிரச்சினை குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நல ஆணையம் மட்டுமே சரியான நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, சம்பந்தப்பட்ட ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பழங்குடியினர் இருக்கும் இடத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட கிராமத் தலைவர்களின் வாக்கு மூலங்களைப் பெற்று நிலங்களை மீட்டு தர வேண்டும்” என கூறினார்.

ஆண்டாண்டு காலமாக நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடியினரின் உரிமைகளை மீட்டு தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு. நிர்வாகம் உடனடியாக இதைக் கவனிக்குமா….. ?

மேலும் படிக்க