June 29, 2017
தண்டோரா குழு
தமிழகத்தின் டிஜிபி யான டி.கே. ராஜேந்திரன் இம்மாதம் 30 ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதனால் தமிழகத்திற்கு புதிய டிஜிபி ஜூலை 1ம் தேதிக்குள் நியமிக்கப்பட வேண்டும்.
இதையடுத்து டெல்லியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புதிய தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக டி.ஜி.பி. பதவிக்கு தமிழக அரசு சார்பில் ஐந்து பேர்களின் பெயர்கள் பரிந்துரை செய்துள்ளது.
1. ஜான்கிட், 2. அர்ச்சனா ராமசுந்தரம், 3, மகேந்திரன், 4. ராதாகிருஷ்ணன், 5.ஜார்ஜ்
இவர்களில், தற்போது மத்திய அரசு பணியில் உள்ள அர்ச்சனா ராமசுந்தரம் புதிய டிஜிபியாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.