October 17, 2022 தண்டோரா குழு
இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை தலைவர் B ஸ்ரீராமுலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
தமிழகத்தின் வளர்ச்சியில் கோவை மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. கோயம்புத்தூர் பலதரப்பட்ட தொழில் கட்டமைப்புகள் கொண்ட பகுதியாகும், இன்ஜினியரிங், பஞ்சாலைகள், ஆடைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வாகனங்கள், கம்ப்யூட்டர் மற்றும் IT நிறுவனங்கள், தங்க நகைகள் செய்தல் போன்ற பல விதமான தொழில் நிறுவனங்கள்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாவட்டமாகும்.
ஆனால் கோயம்புத்தூரின் கட்டமைப்பு வசதிகள் சரியாக பேணப்படவில்லை. கோயம்புத்தூர் எப்பொழுதுமே அதனுடைய தொழிலதிபர்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் தங்கள் சொந்த முயற்சியினால் அபிவிருத்தி செய்து முன்னேறி வருகிறார்கள்.இந்திய தொழில் வர்த்தக சபை, கோயம்புத்தூர் – தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் பல வேண்டுகோள் அளித்திருக்கிறது.
இந்திய தொழில் வர்த்தக சபை எப்பொழுதுமே தொழிலதிபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அரசுக்கும் பக்கபலமாக அனைவரையும் ஒருங்கிணைத்து கோவை பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. கோவையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்கும் முதன்மையான நிறுவனமாக இந்திய தொழில் வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது.
கோவை பகுதி இன்னும் சிறப்பாக வளர தொழில்முனைவோர்கள் பலநாட்டிலிருந்து கோவைக்கு வந்து முதலீடு செய்ய, கோவை பகுதி தொழில் செய்வோருக்கும் வியாபாரம் செய்வோருக்கும் மிகச்சிறந்த சிறப்பிடம் ஆக இருக்க அந்தத் தகுதியை வளர்க்க இந்திய தொழில் வர்த்தக சபை சில கோரிக்கைகளை அரசுக்கு வைத்து அதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. உதாரணமாக
1 – Coimbatore Metro:
2 – Coimbatore – Karur Greenway + Northern Ring Road:
3- Coimbatore Airport Expansion:
4 – Coimbatore – Sathyamangalam 4 lane:
5- Avinasi Road Flyover:
6- Athikadavu – Avinasi Project:
7- Western Ring Road:
8 – Pillur Project:
10 – Sulur Defense Park
11 – Ongoing flyover works:
12 – Expansion of L&T Bypass
13 – Multi Modal Logistics Park
14 – Renovation of Coimbatore Junction
15 – Vellalur Integrated Bus Stand
இதுபோன்ற திட்டங்கள் பல இருக்கிறது இவை அரசின் கவனத்திலும் இருக்கிறது ஆனால் பல காரணங்களால் விரைவாக செயல்பட இயலாமல் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதியின் வளர்ச்சி தடைப்படுவதுடன், வெளிநாட்டில் உள்ளவர்களும் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டால் கோவை பகுதி இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் மிகச்சிறந்த தொழில் நகரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய தொழில் வர்த்தக சபை, கோயம்புத்தூர் அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் அரசுடன் சேர்ந்து செயல்பட்டு இந்தப் பகுதியை சிறந்த கட்டமைப்பு கொண்ட, வசதிகள் கொண்ட அனைத்து தரமான வளர்ச்சிக்கான கட்டுமான பணிகளும் நிறைவேற்றி சிறந்த பகுதியாக செயல்பட உறுதி அளிக்கிறது.
கோவை பகுதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் ஏன் உலகத்தின் மிகச்சிறந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் பகுதியாக மாற்ற வேண்டும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசை வேண்டிக் கொள்வதுடன் அதற்கான முழு ஒத்துழைப்பும் தருவதற்கு தயாராக இருப்பதாக
தெரிவித்தார்.