March 22, 2017 தண்டோரா குழு
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,096.80 கோடி வழங்க, உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆய்வு செய்தது. தொடர்ந்து தில்லி சென்ற குழு தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் அடிப்படையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,096. 80 கோடி வழங்க உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இதே போல தமிழகத்திற்கு வறட்சி நிவராணமாக ரூ.1748.28 கோடி வழங்க துணைக்கமிட்டி உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யுள்ளது.
தமிழக அரசு வறட்சி நிவராணமாக ரூ.39656 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய குழுவினரின் பரிந்துரை மிகவும் குறைவு என்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழத்திற்கு வறட்சி நிவராணமாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற இருக்கும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.