July 17, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
குடியரசுத் தலைவர் தேர்தல் காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கும் என கூறப்பட்டிருந்த, நிலையில் தமிழகத்தில் பகல் 12 மணிக்கே ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது.
தலைமைச்செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வாக்கை செலுத்தினர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.