April 28, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஐ.ஐ.டி. நிபுணர் குழுவை அமைக்க கோரி வழக்கறிஞர் மேகநாதன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் சீமைக் கருவேலமரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி மாற்றி ஐஐடி இயக்குநர் பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கை மே 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மே 11 வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.