July 4, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்காக தமிழக அரசு இரு குழுக்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்காக கலைத்திட்ட வடிவமைப்புக் குழு மற்றும் உயர்மட்டக்குழு என இரண்டு குழுக்கள் தமிழக அரசின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளது.
பத்து பேர் அடங்கிய கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகிப்பார்.மேலும் இக்குழுவில் செயலாளராக அறிவொளியும், உறுப்பினர்களாக எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், ராமானுஜம், சுந்தரமூர்த்தி, ராமசாமி, சுல்தான் அகமது இஸ்மாயில், உள்ளிட்டோர் இருப்பார்கள்.
உயர்மட்டக்குழுவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகிப்பார். பாலகுருசாமி, விஜயகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட 13 பேர் இக்குழுவில் அடங்குவார்கள்.