June 20, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஷால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். நமது அண்டை மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மகாராஸ்டிராவில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
இதே போன்று தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வறுமையை போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து எதிர்கால விவசாயிகளின் வாழ்கையை வளமாக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.