• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் 95 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள்

May 17, 2023 தண்டோரா குழு

தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகத்தில் 95 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 593 பயனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒன்றிய அரசின் ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்’ என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே முன்னெடுப்பின்படி ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் உள்ள ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள், உள்நாட்டு அல்லது உள்ளூர் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் மற்றும் அதனை பிரபலப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் சோதனை முயற்சியாக கடந்த 25.3.2022 அன்று தொடங்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் தற்போது மே 1ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 95 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ மையங்கள் உள்ளன. இந்த ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் தேசிய வடிவமைப்பு நிறுவனம் மூலம் சீரான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ என்பது அந்த புவியியல் இடத்திற்கே உரியது. அதாவது, அப்பகுதியில் கிடைக்கும் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகும். குறிப்பாக பழங்குடியினரால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், உள்ளூர் நெசவாளர்களின் கைத்தறிகள், உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கோவில்பட்டி கடலை மிட்டாய்கள், மசாலா தேநீர், காபி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட,அரை பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தில் இத் திட்டம் தொடக்கத்தில் இருந்து 593 பயனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இந்த விற்பனை நிலையங்களை நடத்த விரும்பும் பயனாளி, அபிவிருத்தி ஆணையர் கைவினைப் பொருட்கள், மேம்பாட்டு ஆணையர் கைத்தறி அல்லது தேவையான மாநில, மத்திய அரசு ஆணையம் அல்லது தனிப்பட்ட கைவினைஞர்கள்,நெசவாளர்கள், கைவினைஞர்களால் வழங்கப்பட்ட கைவினைஞர்,நெசவாளர் அடையாள அட்டையை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். கே.வி.ஐ.சி போன்றவை. அல்லது பி.எம்.இ.ஜி.பி.,இல் பதிவுசெய்யப்பட்ட சுயஉதவி குழுக்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, விற்பனை நிலையங்களை ஒதுக்குவதற்கு வெளிப்படையான வழிமுறை பின்பற்றப்படுகிறது.ஆர்வமுள்ள கைவினைஞர்கள்,நெசவாளர்கள் மற்றும் பிற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்காக ஸ்டேஷன் அளவில் அமைக்கப்பட்ட குழுவின் சீட்டு குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

தகுதியான பயனாளி 15 நாட்களுக்கு உள்ளூர், சுதேசி தயாரிப்புகளை விற்பனை செய்ய ரயில் நிலையத்தில் ஒரு ஸ்டால் அமைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் டோக்கன் கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க