August 30, 2023 தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை பந்தய சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அலுவலகத்தில் தமிழகம் முழுவதும் மினி பஸ் சேவை மீண்டும் முழு அளவில் இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி,
1999-ம் திமுக ஆட்சியில் மினி பஸ் பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு மற்றும் தற்போது ஆட்சியிலும் மினி பஸ் பயன்பாடு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற விவசாயிகளுக்கும் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருட்களை நகர்ப்புறங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் போகிறது என்று குற்றம் சாட்டினார்.
கிராமப்புறங்களில் இருந்து நகர்த்துக்கு மையப் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்கினால் மட்டுமே விவசாயிகளும் கிராமப்புற மக்களும் நன்மை அடைவார்கள் என்று கூறினார்.மினி பஸ் முடக்கத்தால் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக மினி பஸ் சேவை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மினி பஸ் இயக்கப்படாததால் பஸ்-சில் கோழி,ஆடு மற்றும் விவசாயிகள் அடைத்து வைக்கும் Godown-னாக மாறிவிட்டது என வர்த்தம் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் 6000 மினிபஸ்கள் ஓடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது வெறும் குறைவான அளவில் மினிபஸ்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை காத்திட உடனடியாக மினி பஸ் சேவையை தொடங்க வேண்டும் எனவும் தேர்தல் வாக்குறுதி 426 உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.