March 30, 2017
தண்டோரா குழு
லாரி உரிமையலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று தென்மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்தது.
புதன்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த போராட்டம் லாரி உரிமையாளர் சம்மேளனம் மன்றும் தென் இந்திய மோட்டார் மோட்டார் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் சுமார் 18 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மாநில அரசு தீர்க்கவேண்டிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூட தமிழக அரசு முன் வரவில்லை என லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.