October 5, 2017 தண்டோரா குழு
தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வந்தார்.
தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வந்தார்.அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்,மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
தமிழக ஆளுநராக பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது.இதனையடுத்து மஹாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி உத்தரவிட்டார்.
கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், அவர் தமிழக ஆளுநராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.