July 26, 2017
தண்டோரா குழு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது,
” நீட் தேர்விலிருந்து முழு விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை. தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன. அதனை சரிசெய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.
தமிழகத்துக்கு சாதகமாக விலக்கு அளிக்க சில கூடுதல் விவரங்களைக் மத்திய அரசு கேட்டுள்ளது. அவற்றை அளிப்பதற்காக தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நல்ல தீர்வு வரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழக அரசு மெத்தனமாக செயல்படவில்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.