July 1, 2017 தண்டோரா குழு
தமிழ் சினிமா துறையை ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு தண்டித்து வருகிறது என நடிகர் சித்தார்த் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி இன்று முதல் அமலாகியுள்ளது. தமிழக அரசு நகராட்சி வரி 30% உண்டு என்று அறிவித்துள்ளது.இதனைக் கண்டித்து வரும் திங்கட்கிழமை (3 ஜூலை) முதல் திரையரங்குகளை மூடுவது என முடிவெடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், தமிழக அரசை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ் சினிமா துறையை ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு தண்டித்து இருக்கிறது. ‘U’ சான்றிதழ் வழங்குவதற்கும், வரி விலக்கு வழங்குவதற்கும் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன.
இவைபோதாது என்று தற்போது 30% உடன் ஜிஎஸ்டி வேறா? வெட்கக்கேடு.இவை ஜிஎஸ்டியால் ஒழிக்கப்படும் என்பதே ஒரே ஆதாயம். அதுதவிர்த்து 30% சேவை வரியும் இருக்கும் என்றால் ஜிஎஸ்டி ஒரு தவறே.
டிக்கெட் விலையைப் பொருத்தவரையில் மக்கள் ஜிஎஸ்டியும் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். 18% ஜிஎஸ்டி இருக்கும் இல்லையேல் மொத்தமாக 28% வசூலிக்கப்படும் என நம்புகிறேன்.அப்படி இல்லையென்றால் வேலைநிறுத்தம்தான் செய்ய வேண்டும்.” இதற்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய குழப்பங்களில் நம்மை வைத்து விளையாடுகிறார்கள்.ஜிஎஸ்டி என்பது ஒரே தேசம் ஒரே வரி.. இதில் விதிவிலக்கு ஏதும் இல்லை”
எனக் கூறியுள்ளார்.