June 30, 2017
தண்டோரா குழு
தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். உளவுத்துறை டிஜிபியாக உள்ள இவர் கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று ஓய்வு பெறும் டி.கே ராஜேந்திரன் பதவி காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டுக்கப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் ராஜேந்திரன் நிரந்தர டிஜிபியாகிறார்.
மேலும், உளவுத்துறை இயக்குநராக உள்ள ராஜேந்திரன் இனி டிஜிபி பதவியில் மட்டும் தொடர்வார்.