July 6, 2017
தண்டோரா குழு
தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோத இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக கடல்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தாலும் அபராதம் விதிக்க இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.