July 29, 2017
தண்டோரா குழு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77பேரைவிடுதலை செய்தது அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மீனவர்கள்எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து 92 மீனவர்களை அந்நாட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.மீனவர்களுடன் 150-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்ததுள்ளது. அவர்கள் நாளை தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழக மீனவர்களின் படகுகளையும் இலங்கை அரசு விடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.