June 24, 2017
தண்டோரா குழு
தமிழக மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர் கடந்த 20-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.