February 20, 2023 தண்டோரா குழு
தமிழர்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, மத்திய அரசு எங்களை அடையாளம் கண்டு கொண்டு ஆளுநர் ஆக்கியுள்ளது- தமிழிசை செளந்தரராஜன்.
கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது.இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
பணியாளர்கள் தினம் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும், அந்த எண்ணம் தற்போது தோன்றுகிறது மாநிலங்களில் அதை அமல்படுத்த திட்டமிருக்கிறது.ஆளுநர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஜனாதிபதி அவர்களால் உள்துறை அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுவதாகும்.தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கப்படவில்லை மத்திய அமைச்சகம் எங்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
தமிழக மக்கள் எங்களை அடையாளம் கொண்டுவந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கலாம் ஆனால் மத்திய அமைச்சகம் எங்களை அங்கீகரித்து எங்கள் திறமையை வீணடிக்க வேண்டாம் என ஆளுநராக ஆக்கி உள்ளது.எங்களைப் போன்றவர்கள் திறமை மிக்கவர்கள் எனவே அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் இதைச் சொன்னால் அது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும்.மக்கள் திறமையானவர்களை கண்டு கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
வடமாநில தொழிலாளர்கள் தமிழ் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,வட மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற யார் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் அதை அறிந்து கொண்டு அதன் பின் கருத்து கூறலாம், என தெரிவித்தார்.தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து நான் பேச இயலாது நான் ஆளுநர் என தெரிவித்த அவர் அது குறித்து கட்சித் தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள் என கூறினார்.