September 9, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மைய வளாகத்தின் தென்மேற்கு மூலையில்மிக முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓட்டுநர் ஓய்வு அறை கட்டிடம் ரூ.239.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடம் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7922.00 சதுரஅடி. இதில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் ஒவ்வொரு தளத்தில் கட்டட பரப்பளவு 1984.00 சதுரஅடி ஆகும்.கட்டடம் தரைத்தளத்தில் பார்வையாளர் அறை, சமையல் அறை, அலுவலகம் கவனிப்பாளர் அறை மற்றும் ஒட்டுநர் அறைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களை கொண்டு கட்டப்பட்டு ஒவ்வொருதளத்திலும் முறையே இரண்டு தங்கும் அறையுடன் கூடிய உணவு அறை மற்றும்கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி முனிஸ்வர் நாத் பந்தாரி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிஷ் உபத்ய, ஜி.ஆர். சுவாமிநாதன்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை நீதிமன்ற முதன்மை நீதிபதி ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட முதன்மை மாஜிஸ்ரேட் சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.