• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

October 7, 2021 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு பணியேற்று பணிபுரிந்துவரும் இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோரின் தகுதிகாண் பருவம் விளம்புகை சரியான தேதியில் உடன் வெளியீடு செய்யப்பட வேண்டும்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதலில் உரிய காரணமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வருவாய்த்துறை அலுவலர் சங்கமான தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மாவட்ட நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணையினை உடன் ரத்து செய்து மீண்டும் அதே பணியிடத்தில் பணியினை தொடர உரிய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்,மாற்று சங்கத்தின் மாவட்ட தலைவராக பொறுப்பில் இருந்துகொண்டு, பெரும்பான்மையாக 457 அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாண்பினைத் தொடர்ந்து சீர்குலைக்கும் வகையிலும், சங்க விரோதம் காரணமாக நடுநிலை தவறி, தொடர்ந்து ஊழியர் விரோதப் போக்கினை மேற்கொண்டு வரும் அலுவலக மேலாளர் (பொது) அவர்களை உடனடியாக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி பணியிடமாறுதல் செய்யப்படவேண்டும்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (பொது) ஊழியர் விரோதப் போக்கினை உடனடியாக கைவிடவேண்டும், கொரோனோ பனையில் இரவு பகல் பாராது பணி செய்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் வலியுறுத்தினர்.

மேலும் அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க