• Download mobile app
15 Apr 2025, TuesdayEdition - 3352
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்

April 13, 2025 தண்டோரா குழு

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியில் உள்ள குரு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளரும் கோவை மத்திய மாவட்ட தலைவராக இருந்த குருஸ் முத்து பிரின்ஸ் தலைமை வகித்தார், கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் மாவட்ட பொருளாளர் கோகுல்நாத் முன்னிலை வகித்தனர், வரவேற்புரை கட்சியின் தொழிற்சங்கமான தமிழக கட்டிடத்து தொழிலாளர் மத்திய சங்கம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் கலையரசி வரவேற்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன் குமார் கலந்துகொண்டு கட்சியின் கிளை உறுப்பினர்களுக்கு தையல் மிஷின் புத்தகப்பை மற்றும் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி கோவை மத்திய மாவட்டத்தின் பொதுக்குழு தேர்தல் முடிவுகளை வெளியிட்டார்.

புதிய பொறுப்பில்,ஆனந்தராஜ் கோவை மாவட்ட செயலாளராகவும்,கோகுல்நாத் கோவை மாவட்ட பொருளாளராகவும், கலையரசி தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ஆகவும், ஜெயபால் கோவை மாவட்ட தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும், சொக்கலிங்கம் தொழிற்சங்கத்தின் கோவை மாவட்ட மாவட்ட இணை செயலாளர் ஆகவும், வில்லியம் ஜோஸ் கோவை மாவட்ட துணை தலைவராகவும், நிர்மல் குமார் கோவை மாவட்ட இணை செயலாளர் ஆகவும், அன்பு கண்ணன் கோவை மாவட்ட துணை செயலாளராகவும், அரவிந்தன் கோவை மாவட்ட துணை செயலாளராகவும், ரமா கண்ணன் கோவை மாவட்ட மகளிர் அணி தலைவராகவும், பூர்ணிமா கோவை மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும் ,பைரவர் சாமி கோவை மாவட்ட இளைஞரணி தலைவராகவும், D.கார்த்திக் கோவை மாவட்ட இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் கடந்த முறை மாவட்ட தலைவராக இருந்த தொழிலாளர் நலத்துறையின் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினருமான குருஸ் முத்து பிரின்ஸ் அவர்களின் சிறப்பான பணியின் காரணமாக கோவை மத்திய மாவட்ட தலைவராக மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குருஸ் முத்து பிரின்ஸ் அவர்களுக்கு அக்கட்சியின் மாநில தலைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய வளருமான பொன் குமார் வாழ்த்து தெரிவித்ததோடு அக்கட்சியின் நிர்வாகிகள்,மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பல கிளை நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சமீபத்தில் தமிழக முதல்வர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக பல சிறப்பு நலத்திட்ட உதவிகள் தொழிலாளர்களுக்கு தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க