• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு வேளாண்மை 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான இணையதள சேவை

June 28, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவங்கி வைத்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பத்திற்கான இணையதள சேவையை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி,

இப்பல்கலைக்கழகத்தில் 1958ல் இருந்து உயர்கல்லூரி பட்ட படிப்புகளை துவங்கியுள்ளதாக கூறினார். இன்று 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பிஜி மற்றும் பி.எச்.டி விண்ணப்ப இணைதள சேவையை(Only Portal) துவக்கியுள்ளதாக கூறினார். இதில் மாணவர்கள் அவர்கள் என்ட்ரோல் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

ஆகஸ்ட் 8ம் தேதிவரி இந்த போர்ட்டல் செயல்படும் எனவும் அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கும் செயல்முறைகளை முடித்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார். மாணவர்கள் முதலில் PC(Provisional Certificate) கொண்டு விண்ணப்பிக்கும் முறைகளை மேற்கொள்ளலாம் எனவும் ஓரிரு மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளவர்கள் அவர்களது டீனிடம் கடிதம் பெற்று அதன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார். அதேசமயம் அம்மாணவர்கள் சேரும் போது அசல் PC இருந்தால் தான் சேர முடியும் எனவும் தெரிவித்தார். https://admissions at offshoot.tnau.ac.in/ என்ற இணைய முகவரி மூலம் எண்ட்ரோல் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

Msc யை பொருத்தவரை 32 programs உள்ளதாகவும், பி.எச்.டி யை பொறுத்தவரை 28 programs உள்ளதாகவும் இதனை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 8 கல்லூரிகளிலும் நடத்தி வருவதாக தெரிவித்தார். ஆகஸ்ட் 11ம் தேதி என்ட்ரோல் செய்த மாணவர்களுக்கு நோட்டிபிகேசன் தந்து விடுவோம் எனவும், அதனை தொடர்ந்து இரண்டு நுழைவு தேர்வுகள் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஒரு நுழைவு தேர்வு ஆகஸ்ட் 27ம் தேதியும், 28ம் தேதி மற்றொரு நுழைவு தேர்வும் நடக்க உள்ளதாக கூறினார்.

நுழைவு தேர்வு கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் தான் நடக்கும் எனவும் கூறினார். அதனையடுத்து செப்டம் 2வது வாரத்தில் மாணவர்களை முடிவு செய்து விடுவோம் எனவும் 3வது வாரத்தில் மாணவர்கள் தொகை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம் என கூறினார். அதனையடுத்து அக்டோபர் முதல் வாரத்தில் கல்லூரி செயல்பட துவங்கி விடும் என கூறினார்.

மேலும் பல்வேறு நாடுகளில் இணைந்து செயல்படுவதாகவும் இங்கு பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளிலும் படிக்க மற்றும் ஆராய்ச்சிகள் செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக கூறினார். மேலும் இந்தியாவில் 40 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக கூறினார். இதனால் ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்தி வருவதாக கூறினார். வழக்கமாக வருடத்திற்கு 400 பேர் பிஜி க்கும் 200 பேர் பி.எச்.டிக்கும் எடுப்போம் என கூறினார்.

மேலும் இம்முறை எவ்வித புதிய படிப்புகளும்(course) அறிமுகப்படுத்தவில்லை என தெரிவித்தார். நாளை இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் சேவை துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் குளோபல் கான்பிரன்ஸை ஜூலை 19 மற்றும் 20ம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில் நடத்த உள்ளதாக தெரிவித்த அவர் இதனால் சிறந்த முதல் 100 மாணவர்களை கொண்டு விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்தும், தொழில் முனைவோர் ஆக்குவதற்கும் ஆலோசனைகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதில் மாணவர்கள் அவர்களது படைப்புகளை விளக்கி அதில் தேர்வு செய்யப்படுவோர்க்கு தொழில்முனைவோர் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தர உள்ளதாக கூறினார்.

மேலும் சதர்ன் குயீன்ஸ்லாந்து உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறிய அவர், டீ, காபி, மாம்பழம், கரும்பு, காட்டன் களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு ஆண்டு அங்கு சென்று மாணவர்கள் படிப்பர் எனவும் தெரிவித்தார். வருடத்திற்கு 2 மாணவர்கள் அங்கு சென்று படிப்பர் எனவும் கூறினார். இதனால் அங்குள்ள தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு இங்கு அதனை செயல்படுத்த வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

மழை பொழிவை பொருத்தவரை, கோவை மலைமறைவு பகுதியில் உள்ளதால், தென்மேற்கு பருவ மழை 4 மாதங்களுக்கு சேர்ந்து 140 மிமீ தான் மழை பொலிவு இருக்கும் எனவும் அதனையும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். இம்முறையும் அதனை எதிர்ப்பார்ப்பதாக கூறினார். புவி வெப்பமயமாததால் மழை பொலிவு நாட்கள் குறையும் எனவும் மழையின் அளவு குறைய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க