April 14, 2023 தண்டோரா குழு
இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவே காணப்படுகிறது.இந்நிலையில் கோவையில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும், அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவில் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சித்திரைக்கனியை முன்னிட்டு தண்டுமாரியம்மனுக்கு 21 வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் நடை முழுவதும் பழத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அம்மனுக்கு அதிகாலை முதலே தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், கொரொனா தொற்று நீங்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.