June 24, 2017
தண்டோரா குழு
குடியரசுத் தலைவர் தேர்தல் ஆதரவு தொடர்பாக தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அ.தி.மு.க எம்பிக்கள் அருண்மொழிதேவன் மற்றும் கோ.அரி கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில்
“குடியரசுத் தலைவர் தேர்தல் ஆதரவு தொடர்பாக மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறிய கருத்தால் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக என்பது ஒரு ராணுவ கட்டுபாடு கொண்ட இயக்கம், ராணுவ கட்டுப்பாட்டோடு நடத்தப்பட வேண்டும். சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என முதலில் கூறியவர் தம்பிதுரை. தற்போது அவரது சொந்த கருத்துக்கள் முதல்வருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
சசிகலா அறிவுரைப்படி ஆதரவு என தம்பிதுரை கூறியது தவறானது. தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றனர் அவர்கள்.