• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஊழல் புகார் எதிரொலி செயல் அலுவலர் நியமனம்

November 10, 2023 தண்டோரா குழு

கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு தமிழக அரசுக்கு கோயில் பக்தர்கள் சார்பில் நன்றி தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து சிவபக்தர் வின்னர்ஸ் இந்தியா சிகே கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாக குழுவில் இருந்த போது நாங்கள் பல்வேறு திருப்பணிகள் செய்து உள்ளோம். கோயிலில் வசூலாகும் நன்கொடைகள் உள்ளிட்ட கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யலாம் என்று கூறினேன். அதற்கு கோயில் நிர்வாகி மறுப்பு தெரிவித்ததோடு, கடந்த 14 ஆண்டுகளாக வசூலித்த பணத்திற்கு கணக்கு தாக்கல் செய்யவில்லை.

இது தொடர்பாக கேட்ட போது பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து கோயிலில் ஊழல் நடப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், கோயில் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை அமைத்து உள்ளது. மேலும், கோயிலுக்கு என செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அரசின் இந்த நடவடிக்கையை பக்தர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

கோயிலுக்கு சித்ரா பவுர்ணமி போன்ற நாட்களில் அதிகளவில் வருவாய் வருகிறது. இதனை அறநிலையத்துறை சரியாக பயன்படுத்தி கோயிலில் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும். மேலும், இதுவரை பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க