April 25, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் குஷ்பூ வசித்து வருகிறார். கடந்த மார்ச் 21ம் தேதி அன்று அவர் வீட்டில் கேட்டினை திறக்கும் போது அவரது கழுத்தில் இருந்த 4½ பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாத 2 நபர்கள் திருடி சென்றனர்.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குஷ்பு துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய ஜெகநாதன் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்து திருடிய தங்க நகையை கைப்பற்றினார்கள்.
இதனிடையே இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவரான சரவணனை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிப்படை காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.