May 8, 2017 தண்டோரகா குழு
தலைமை நீதிபதி உட்பட 8 உச்சநீதிமன்றநீதிபதிகளுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். இவரை கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த உத்திரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாக கருதி உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீதுநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதுமட்டுமின்றி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்திரவிட்டது. இதையெடுத்து அவர் மார்ச் 31ம் கர்ணன் உச்சநீதிமன்றத்தில்நேரில் ஆஜரானார்.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7எனக்கு முன்னால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்திரவிட்டார். அவர்கள் ஆஜராகாததால் அந்த 7 நீதிபதிகளுக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார். இதனால் நீதிபதி கர்ணனுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மோதல் போக்கு நிலவியது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். வன்கொடுமைச் சட்டத்தின் படி 7 நீதிபதிகளும் குற்றம் செய்துள்ளதாக நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.