February 8, 2017
தண்டோரா குழு
ஜெயலலிதாவுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் அவர் மரணம் அடைந்தார் என்று தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“தவறான சிகிச்சை கொடுத்ததால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவம் குறித்து “இந்தியா டுடே” மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் புதன்கிழமை மாலை தெரிவிக்கிறார். தவறான சிகிச்சை அளித்த குற்றத்திற்காக, சசிகலா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.