April 1, 2016 mirror.co.uk
மூன்று தலைமுறைகளாக அனைத்து வகை மோட்டார் வாகனச் சந்தையிலும் முன்னிலையில் இருப்பது பி.எம்.டபள்யு நிறுவனம்தான். இந்நிலையில் இந்த நிறுவனம் திடீரென குழந்தைகள் காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஒன்று முதல் மூன்று வயதுடைய குழந்தைகள் இந்தக் காலணிகளை அணிந்து நடந்தால் அந்தக் காலணி நடக்கும் தரையின் தன்மைக்கேற்ப வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்திற்குள் தன்னை மாற்றிக்கொள்ளும்.
தரை க்ரானைடாக இருந்தாலும் அல்லது வலுக்கும் பிளைவுட் பலகையாக இருந்தாலும் உடனடியாக தன்மையை மாற்றிக்கொண்டு குழந்தையின் எடைக்குத் தகுந்தவாறு மாறும் தன்மை கொண்டது. இதன் மூலம் அந்தக் குழந்தை ஒரு காரில் பயணம் செய்யும் உணர்வைப்பெரும் என நிறுவனத்தினர் பெருமைகொள்கின்றனர்.
இது குறித்து தயாரிப்பு பிரிவு தலைமை அதிகாரி ஜோஸ் ப்புளின் கூறும்போது, குழந்தைகள் காலணி என்பது தற்போது உலகளவில் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாகன தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்தான் என்பதால் தயாரிப்பு மிகவும் எளிமையாக உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்தக் காலணியை அணிந்து செல்லும் குழந்தைகளுக்கு நடைக்கான சந்தோசத்தையும், பயிற்சியையும் தரும், இனி குழந்தைகள் எந்த வகையான தரையிலும் நடக்கலாம் எனத் தெரிவித்தார்.