• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாக்குதலை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் – கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு

October 6, 2023 தண்டோரா குழு

தாக்குதலை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் – கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் 92வது வார்டு குனியமுத்தூர் காமராஜர் வீதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.நேற்று பணி நடந்து கொண்டிருந்த போது,அதே பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவர் அங்கே வந்துள்ளார்.அவர் தனது வீட்டின் அருகே தார் பேட்சி அமைத்து தர வேண்டும் என கேட்டார்.

அப்போது பணியில் இருந்த ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர், ஊழியர்கள் தற்போதைய பணி முடிந்த பின் அந்த இடத்திற்கு வந்து பேட்ச் அமைத்து தருவதாக கூறியுள்ளனர்.ஆனால் நாகராஜ் இதனை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் மகனுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிறுவன ஊழியர் சவுந்தரராஜ் காயமடைந்தார்.அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது குனியமுத்தூர் போலீசில் புகார் தரப்பட்டது. பணிகள் செய்யும் இடங்களில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடமும் புகார் தெரிவிக்கப்பட்டது,

மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்க செயலாளர் சந்திர பிரகாஷ் கூறுகையில்,

” ஒப்பந்த நிறுவனத்தினரை தாக்கியது சரியான செயல் அல்ல. பணிகளில் குறைபாடு இருந்தால் மாநகராட்சி கமிஷனர் மண்டல அலுவலகம், பொறியாளர்களிடம் புகார் தரலாம். அதை விட்டு விட்டு வேலை செய்யும் நிறுவனத்தினரை தாக்குதல் நடத்த கூடாது. மாநகராட்சி அதிகாரிகள் பணி செய்யும் இடத்திற்கு செல்லும் போது அவர்கள் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்த கூடிய நிலைமை இருக்கிறது.

எனவே சட்டப்படி செயல்பட வேண்டும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவே நாளை (6ம் தேதி) மாநகராட்சி பகுதியில் அனைத்து வேலைகளை நிறுத்தி வைக்கப்படும் போர்வெல் இயக்கம் தவிர வேறு பணிகள் நடக்காது. பணிகள் செய்ய ஒப்பந்ததாரர்கள் முன் வரக்கூடாது. அப்படி யாராவது மீறி பணிகள் நடத்தினால் சங்கத்தின் சார்பில் வந்து பணிகளை நிறுத்தி வைக்கப்படும், ” என்றார்.

மேலும் படிக்க