October 16, 2017 தண்டோரா குழு
தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது என பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கீத் சோம்,தெரிவித்துள்ள கருத்து,சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் உ.பி., முதல்வர், நமது கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில்,பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கீத் சோம்நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பேசுகையில்,
தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது. இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது தான் தாஜ்மஹால். உ.பி., சுற்றுலாத்துறை கையேட்டில் சேர்க்க முடியாது. தாஜ்மஹால் நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக பலரும் கூறுகின்றனர். தாஜ் மஹாலை கட்டிய ஷாஜகான் தனது தந்தையையே சிறையில் அடைந்தவர். அவர் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார்.
இத்தகையவர்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் வேதனையானது. நமது வரலாற்றை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், சங்கீத் சோமின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும்,பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும் தாஜ்மஹால் குறித்து கூறி இருக்கும் கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.